நாட்டின் பல பாகங்களில் இன்றும் மழையுடனான வானிலை!

நாட்டில் இன்று (16) மத்திய, சப்ரகமுவ வட மேல் மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழைப் பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவ்வாறே வட மாகாணத்தில் இன்று (16) காலை சிறியளவில் மழைப்பெய்யக்கூடும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மழையுடனான வானிலை நிலவும் அதேவேளை, மத்திய மழைநாட்டின் மேற்கு சரிவிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 40 கிலோமீற்றராக அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
0000
Related posts:
திறந்த சந்தையில் சலுகை விலையில் உரம் வழங்க தீர்மானம்!
புதிய பாதீடு வரும் வரையில் புதிய நியமனங்கள் வேண்டாம் - திறைசேரிப் பணிப்பாளர்!
எக்ஸ் - பிரஸ் பேர்ல் கப்பலை அகற்றும் பணிகள் நவம்பரில் முன்னெடுப்பு - நீதி அமைச்சர் அலி சப்ரி தகவல்!
|
|