நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை – வளிமண்டலவியல் திணைக்களம்!
Tuesday, April 23rd, 2019
நாட்டின் பல பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுகின்றது. மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்
Related posts:
இலங்கைக்கு விஜயம் செய்யுங்கள் - உலக நாடுகளுக்கு மாலைதீவின் சபாநாயகர் அழைப்பு!
தேர்தலை நீதியாகவும் நேர்மையாகவும் நடத்துவதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் - கோருகின்றார் யாழ் அரச...
தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்ட அரச மற்றும் ஏனைய அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு நாள் ஊதியக்குறைப்பு ...
|
|
|


