நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்- வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!!

Sunday, January 2nd, 2022

நாட்டின் வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டஙகளிலும் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் ஆகிய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

அத்துடன் வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களின் ஒருசில பிரதேசங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும். வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடை மணித்தியாலத்துக்கு 40 கிலோமீற்றருக்கு காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும்.

மேலும் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய ஆகிய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் காலை நேரங்களில் பனிமூட்டம் நிறைந்து காணப்படும்.

எனவே இடியுடன் கூடிய மழையுடன்கூடிய கடும் காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் அனர்த்தங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்குமாறும் அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.. 

000

Related posts: