இலங்கை – யப்பான் இடையே உடன்படிக்கை கைச்சாத்து!

Friday, July 28th, 2017

யப்பான் மற்றும் இலங்கைக்கிடையில் இலங்கை பணியாளர்களை பயிற்றுவிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

யப்பானின் IN JAPAN என்ற நிறுவனமும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கும் இடையே இலங்கையர்களை பயிற்றுவித்தல் மற்றும் தொழில் தொடர்பான புரிந்துணர்விற்குமான உடன்படிக்கையில் IN JAPAN நிறுவனத்தின் தலைவர் இக்யோகி யன கிசாவா என்பவரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரளவும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

இது தொடர்பாக சமீபத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் இடம்பபெற்ற நிகழ்வில் இந்த உடன்படிக்கைக்கு உட்பட்டதாக நான்கு உப உடன்படிக்கைகளிலும் இவர்கள் கைச்சாத்திட்டுள்ளனர்.இவற்றின் கீழ் இலங்கையில் மனிதவளத்துடன் பயிற்சியை பெற்றுக்கொள்ளுதல் மற்றும் யப்பானின் அருங்கலைகள் ஆற்றலை பரிமாறிக்கொள்ளுதல் முதலானவை இவற்றின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts: