நாட்டின் நிலைமைகள் குறித்து தீர்மானிக்க அனைத்து மாவட்டச் செயலாளர்களையும் கொழும்புக்கு வருமாறு அவசர அழைப்பு விடுத்த பொது நிர்வாகம், உள்துறை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர்!

அனைத்து மாவட்டங்களினதும் செயலாளர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் தற்போதயை நிலைமை குறித்து மறுஆய்வு செய்ய இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்துறை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் சிறிபாலா ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரசு நிறுவனங்களில் எவ்வாறு கடமைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்தும் இதன்போது தீர்மானம் எட்டப்படவுள்ளது.
அதன் பின்னர் குறைந்த எண்ணிக்கையிலான அத்தியாவசிய ஊழியர்களின் பங்களிப்புடன் முதல் கட்டம் பணிகள் தொடங்கப்படும் என்றும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
இதற்கிடையில், அரசு நிறுவனங்களில் கடமைகள் தொடங்குவது தொடர்பாக அடுத்த வாரம் சிறப்பு சுற்றறிக்கை வெளியிடப்படும் என்று பொது நிர்வாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Related posts:
குளங்களைப் பார்வையிடச் செல்வோர் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி உயிராபத்தை தவிர்த்துக் கொள்ளவும் - ப...
சோளம் பற்றாக்குறை: திரிபோஷா தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது!
இரண்டாம் தவணையுடன் யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகள் மிள ஆரம்பிக்கும் - வடமாகாண கல்வி அமைச்சின் செய...
|
|