நாட்டின் ஏழு மாவட்டங்களுக்கு டெங்கு தொற்று அச்சுறுத்தல் அதிகரிப்பு !

மழையுடனான காலநிலை தொடர்கின்ற நிலையில், நாட்டின் பல மாவட்டங்களில் டெங்கு நோய் பரவும் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.
சுகாதார சேவைகள் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அத்துடன் இந்த இடங்களில் டெங்கு நோய் பரவுவதற்கான சாத்தியங்கள் அதிகம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நாட்டு மக்கள் தங்களது சுற்றுப் புறங்களில் நீர் தேங்கி நின்று நுளம்புகள் பெருகுவதற்கு இடமளிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் நாளைமுதல் விசேட டெங்கு ஒழிப்பு வாரம் அமுலாக்கப்படவுள்ளது.
Related posts:
அதிக வருமானத்தை ஈட்டும் தேயிலை ஏற்றுமதி!
மன்னாரையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா - 123 பேருக்கும் மேற்பட்டோருக்கு தொற்றுறுதி - இருவர் மரணம்!
சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை வெளி...
|
|