நாட்டின் அபிவிருத்தியை முடக்க இடமளிக்க முடியாது – ஜனாதிபதி!

Thursday, June 13th, 2019

நாட்டை கட்டியெழுப்பும் வாவி, விவசாய, கல்வி மற்றும் கைத்தொழில் புரட்சியை முடக்கி மேலெழுந்துள்ள குரோதம் மற்றும் தனிப்பட்ட அரசியல் நோக்கங்களை அடைந்துகொள்வதற்கான புரட்சியின் காரணமாக நாட்டின் அபிவிருத்தி பின்னடைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அத்துடன் இந்த தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காக நாட்டின் அபிவிருத்தியையும் மக்களின் தேவைகளையும் முடக்குவதற்கு இடமளிக்க முடியாதென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சுற்றாடலையும் வன வளத்தையும் பாதுகாப்பதற்கு தான் பல தீர்மானங்களை மேற்கொண்டது நாட்டு மக்களின் சுவாசிக்கும் உரிமையை உறுதிப்படுத்துவதற்காகும் எனவும் அந்த தீர்மானங்கள் குறித்து தன்மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டபோதும், வன வளத்தை பாதுகாக்கும் பொறுப்பை எவரும் தட்டிக்கழிக்க முடியாது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாம் முன்னோக்கிச் செல்வதற்கு நாட்டின் விவசாயத்துறையை கட்டியெழுப்பி விவசாயிகளை வலுவூட்ட வேண்டுமென குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டின் வாவிகள் மற்றும் விவசாயத்துறைக்காக மேற்கொள்ள முடியுமான அனைத்து பொறுப்புக்களையும் நிறைவேற்றி கடந்தகால கீர்த்தியை நாட்டுக்கு பெற்றுக்கொடுக்க அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் தெரிவித்தார்.

Related posts: