புதிய அமைச்சரவையின் பெயர்ப் பட்டியல் இன்று ஜனாதிபதியிடம்!
Tuesday, December 18th, 2018
புதிய அமைச்சரவைக்காக நியமிக்கப்பட வேண்டிய 30 அமைச்சர்களின் பெயர்ப் பட்டியல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று(18) மாலை கையளிக்கப்படுமென, ஐக்கிய தேசிய முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினரொருவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட வேண்டிய அமைச்சுகளும் குறித்த பட்டியலுடன் இணைத்து அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அமைச்சர்களின் பெயர்ப்பட்டியலுக்கு ஜனாதிபதியின் அனுமதி கிடைத்தவுடன் உடனடியாக புதிய அமைச்சரவை சத்தியபிரமாணம் செய்து கொள்ளத் தயாராகவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
உலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பு நிறுத்தம்!
S.L.C இன் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் விசாரணை செய்ய விசேட குழு !
அம்புலன்ஸ் இலக்கங்கள் வெளியிடு – வடக்கு மாகாண சுகாதார சேவைகள் தினைக்களப் பணிப்பாளர்!
|
|
|


