நாடு முடக்கப்படுவது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் இன்று விசேட கலந்துரையாடல்!

நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்பான தற்போதைய நிலைமைகள் குறித்து விவாதிக்க ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் இன்று ஒரு முக்கிய கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
கொவிட்-19 தொற்றால் நாளாந்த நோயாளர்களது எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளின் அதிகரிப்பு வேகம் ஆகியவற்றை கருத்திற் கொண்டே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
வைரஸ் வேகமாக பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய முடக்கலுக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்துள்ளன, மேலும் அது தொடர்பில் இன்றைய கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாடு திரும்பினார் பிரதமர்!
நிரந்தர தீர்வுகளை பெற்றுத்தாருங்கள் – ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் நெடுந்தீவு புனித யூதாதேவி மாதர் அமை...
கனிய வளங்கள் ஏற்றிச்செல்ல பதிவு செய்திருப்பது அவசியம் - புவிச்சரிதவியல் பணியகம் !
|
|