கனிய வளங்கள் ஏற்றிச்செல்ல பதிவு செய்திருப்பது அவசியம் – புவிச்சரிதவியல் பணியகம் !

Tuesday, July 17th, 2018

அனுமதிப் பத்திரமின்றி கனிய வளங்களைக் கொண்டு செல்லும் டிப்பர் வாகனங்களைச் சுற்றி வளைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

கனியப் பொருள்களைக் கொண்டு செல்லும் டிப்பர் வாகனங்கள், பதிவு செய்திருத்தல் அவசியம் என பணிப்பாளர் நாயகம் சஜ்ஜன டி சில்வா அறிவுறுத்தியுள்ளார்.

அவர் தெரிவித்ததாவது:

டிப்பர் வாகனங்களை அடையாளங் காண்பதற்காக ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்காகத் தொடர்பாடல் நிறுவனத்துடன் ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதன்மூலம் கனிய வளங்களை ஏற்றிய வாகனங்கள், பயணத்தை ஆரம்பித்தது முதல் உரிய வகையில் பயணிக்கின்றதா என்பது தொடர்பில் கண்டறிய முடியும்.

கனிய வளங்களைக் கொண்டு செல்வதற்கு இதுவரை 5 ஆயிரத்துக்கும் அதிகமான டிப்பர் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார்.

Related posts:

மக்களின் திசைதிருப்ப சர்ச்சைக்குரிய அறிக்கைகள் வெளிவருகின்றன - தேர்தல் கண்காணிப்பு அமைப்பு குற்றச்சா...
அனைத்து நடவடிக்கையிலும் வெற்றியடைந்துள்ளோம் - கொரோனா தொற்று கட்டுப்படுத்தல் தொடர்பில் இராணுவத் தளப...
கொரோனா தடுப்பூசிகளை விரைவாக பெற்றுக்கொள்ளுங்கள் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுமக்களுக்க அறிவுறு...