நாடு நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சூழலில் அரசியல் நோக்கங்களுக்கான போராட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியாது – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

Thursday, July 15th, 2021

கொரோனா வைரஸ் குறிப்பிடத்தக்க அளவிற்கு கட்டுப்பாட்டிற்குள் வரும்வரையில் தொழிற்சங்கங்கள் தங்கள் போராட்டங்களை கைவிடவேண்டும் என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேநேரம் நாடு சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சூழலில் அரசியல் நோக்கங்களுடன் தொழிற்சங்க போராட்டங்களை முன்னெடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா பெருந்தொற்று என்பது சர்வதேச நிகழ்வு என தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் குறித்த விடயம் தற்போதைய அரசாங்கத்தின் அரசியல் சுலோகமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கும் உயிர்களை காப்பாற்றுவதற்கும் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாகவே சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சுகாதர வழிகாட்டுதல்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது என தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் இந்த வழிகாட்டுதல்கள் தனிநபர்களிற்கானவையோ அல்லது குழுக்களுக்கானவையோ இல்லை  எனவும் அது முழு நாட்டிற்குமானவை எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் சுகாதார பணியாளர்களிற்கு உதவுவதற்குமே பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றத்தில் 9 ஆயிரத்து 67 பேர் மீது தண்டனை விதிப்பு - பொலிஸ் ஊடகப் பிரிவு தெரி...
பலஸ்தீன ‘இனப்படுகொலை’ தொடர்பாக இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தயங...
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா - வடக்கு மாகாண ஆளுநர் சார்ள்ஸ் சந்திப்பு - வடக்கு மாகாண...