நாடு தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது – அமைச்சர் காமினி லொக்குகே தெரிவிப்பு!

Tuesday, August 3rd, 2021

நாடு தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என அமைச்சரவை ஒருமனதாக முடிவு செய்துள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டம் தொடர்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து கூறுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் – ஆசிரியர்களின் சம்பளக் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கத்துக்கு 56 பில்லியன் ரூபா செலவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பிரச்சினை கடந்த அரசாங்கத்தினால் ஏற்பட்ட பிரச்சினை எனவும் குறித்த விடயத்தை அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் பரிசீலிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இவ்விடயம் தொடர்பாக குறித்த அமைச்சரவையில் விரிவாக விவாதிக்கப்பட்டது. பேச்சுவார்த்தையின் முடிவுகள் குறித்து தொழிற்சங்கத் தலைவர்களுக்குத் தெரிவிக்கப்படும்.

நாட்டின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு அரசாங்கத்தினால் தற்சமயம் 56 பில்லியன் ரூபா நிதியைச் செலவழிக்க இயலாது.

போராட்டங்களை நடத்த தொழிற்சங்கங்களுக்கு ஜனநாயக உரிமை உள்ளது. இந்த உரிமையை அரசாங்கம் தடுக்காது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


மீண்டும் கொரோனா அச்சம் : குடாநாட்டில் பொருட்கள் கொள்வனவு செய்ய மறுபடியும் முண்டியடிக்கும் மக்கள்!
புத்தாண்டு காலத்தில் பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கும் - இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறி...
தாமதமான சாரதி அனுமதி அட்டைகளை தனியார் மூலம் அச்சிட தீர்மானம் - மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் ந...