இரண்டாயிரம் பேருக்கு காணியுரிமங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை!

Saturday, September 3rd, 2016

20 வருடங்களுக்கும் மேலாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணிகளில் வசித்துவந்த 2000 பேருக்கு காணியுறுதிப் பத்திரங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் சகல பிரதேசங்களையும் உள்ளடக்கும் வகையில் காணியுறுதிகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் சுமனதிஸ்ஸ தாம்புகல குறிப்பிட்டார்.

பொருத்தமான ஒரு தினத்தில் ஜனாதிபதி தலைமையில் காணியுறுதிப் பத்திரங்களை பயனாளிகளுக்கு கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.சகல இனத்தவர்களையும் உள்ளடக்கிய வகையில் பாரபட்சமின்றி காணியுறுதிப் பத்திரங்கள் வழங்கப்படும் என்றும் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

sl-logo

Related posts: