நாடாளுமன்ற செயற்பாடுகளை இடைநிறுத்தி விவாதத்திற்கு எடுக்கப்பட்ட ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை!

Tuesday, May 17th, 2022

நாடாளுமன்ற செயற்பாடுகளை இடைநிறுத்தி ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் அவசரமாக விவாதிக்க வேண்டும் என கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணையை அவசரமாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இன்று தீர்மானிக்கப்பட்டதாகவும்  அவர்  கூறினார்.

இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து நாடளாவிய ரீதியில் வீதிக்கு இறங்கிய மக்கள் அரசாங்கத்தை பதவி விலகவேண்டுமென  போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மக்களின் போராடங்கள் தீவிரமானதை அடுத்து மஹிந்த ராஜபக்க்ஷ பிரதமர் பதவி விலகியதை அடுத்து , நாட்டின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார்.

எனினும்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகாத நிலையில் மக்கள் போராட்டம் தொடர்கின்ற நிலையில்  ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணையை அவசரமாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: