ஐ.தே.க. அமைச்சர்களை மாற்ற முடியாது ரணில் திட்டவட்டம்

Saturday, May 20th, 2017

அமைச்சரவை மாற்றம் தொடர்பாக வெளியாகும் ஊகங்களின் மத்தியில் ஐ.தே.க.அமைச்ர்கள் எவரையும் மாற்ற வேண்டாம் என தமது தலைவரும்   பிரதமருமான  ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மைத்ரிபாலா சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோருக்கு அறிவித்துள்ளதாக  ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரத்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவை மாற்றம் ஏற்படவேண்டும் என்கின்ற சூழ்நிலை ஏற்பட்டால் அமைச்சர்களாக இருக்கும்  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் அதனை மேற்கொள்ளுங்கள் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரவித்துள்ளதாகவும் கட்சி வட்டாரத்  தகவல்கள் மேலும் தேர்விகின்றன.

அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் யூ.என்.பி.க்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள அமைச்சர்களின் மாற்றத்தை  எதிர்க்கவில்லை என ஊடக அறிக்கைகள் சில தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதியுடனான அண்மைய சந்திப்பொன்றின் போது  அமைச்சர்கள் மாற்றம் தொடர்பான முடிவுகளை தேரிவிப்பதற்க்கு போதுமான கால அவகாசம் வழங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார் எனவும் தேரிவிக்கப் படுகிறது. தேவைப்பட்டால் ஆறு மாதங்கள் கழித்து அமைச்சரவை மாற்றம் தொடர்பில் பரிசீலனை செய்யலாம் என ரணில்  தெரிவித்ததாகவும்  அறிய முடிகிறது.

அமைச்சர்களை நியமனம் செய்யும் போது ஜனாதிபதி பிரதமருடன் ஆலோசனை நடாத்த வேண்டியது அவசியம் என  அரசியலமைப்பின் 19 வது திருத்தம் வலியுறுத்துவது குறிப்பிடதக்கது.

Related posts: