நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகளுக்காக 25 கோடி ரூபா செலவு!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகளுக்காக ஆண்டு ஒன்றுக்கு சுமார் 25 கோடி ரூபா செலவிடப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் நாடாளுமன்ற தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகளுக்காக 258582312 ரூபா செலவிடப்பட்டுள்ளது.
பொதுவாக ஒரு மாதத்தில் எட்டு நாட்கள் நாடாளுமன்ற அமர்வுகள் நடத்தப்படுகின்றது. இதன் போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்காக 12008 ரூபா செலவிடப்படுகின்றது.இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கொடுப்பனவுகளுக்காக மாதம் ஒன்றுக்கு 97065 ரூபா செலவிடப்பட உள்ளது.இதேவேளை, கடந்த 2016ஆம் ஆண்டில் 97 நாட்கள் நாடாளுமன்ற அமர்வுகள் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு நடந்தது என்ன? - இயக்குனர் நாயகம் அதிரடி!
யாழில் “இன்னல” கிழங்குச்செய்கை வெற்றி!
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதால் நெருக்கடிக்கு தீர்வு கிட்டாது - எஸ்.பி.திஸாந...
|
|