நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதால் நெருக்கடிக்கு தீர்வு கிட்டாது – எஸ்.பி.திஸாநாயக்க தெரிவிப்பு!

Sunday, April 10th, 2022

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதன் மூலம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் படும் இன்னல்களுக்கு அரசாங்கம் என்ற ரீதியில் வருந்துவதாக கூறிய அவர், மக்களின் குறைகளை உணர்ந்து அரசாங்கம் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை தொடர்பாக எவ்வித பிரச்சினையும் ஏற்படவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை எங்களுக்கு ஜனாதிபதி கோட்டா வேண்டும் என தெரிவித்து தங்காலை மற்றும் கண்டியில் பேரணிகள் நடைபெற்று வருகின்றன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் வீதியில் இறங்கி அவருக்கும் அரசாங்கத்திற்கும் ஆதரவை தெரிவித்து போராடி வருகின்றனர்.

இதேவேளை கொட்டும் மழையிலும் இன்று இரண்டாவது நாளாக காலிமுகத்திடலில் இளைஞர்கள் போராடிவருகின்றனர்.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு உதவும் வகையில் சமூக ஆர்வலர்கள் உணவுகள் மற்றும் குடிநீர், மற்றும் மழைக்கவசம் ஆகியவற்றை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: