நாடாளுமன்ற உறுப்பினர்களின் உயிர்களுக்கு அல்லது வீடுகளுக்கு ஆபத்து ஏற்பட ஒருபோதும் இடமளிக்கப்படாது – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதி!
Sunday, August 27th, 2023
“மக்கள் பிரதிநிதிகளே நாடாளுமன்ற உறுப்பினர்கள். அவர்களின் உயிர்களுக்கு அல்லது அவர்களின் வீடுகளுக்கு ஆபத்து ஏற்பட ஒருபோதும் இடமளியேன்.”- இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பியின் கொழும்பு வீடு முன்பாக நேற்று இரண்டாவது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையிலேயே ஜனாதிபதி மேற்படிக் கருத்தை வெளியிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
“எங்கு பாதுகாப்பு கேள்விக்குட்படுத்தப்படுகின்றதோ அங்கு பொலிஸாரையும் படையினரையும் வரவழைத்துப் பாதுகாப்பைப் பலப்படுத்துவேன்.
தற்போது சில தரப்பினர் எடுத்ததற்கெல்லாம் எதிர்ப்புப் போராட்டங்களை நடத்துகின்றனர். எம்.பிக்களையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. எனினும், எம்.பிக்களின் உயிர்களுக்கும், அவர்களின் வீடுகளுக்கும் ஆபத்து ஏற்பட ஒருபோதும் இடமளியேன்.” – என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


