கொரோனா வைரஸ் – அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் விடுத்துள்ள கோரிக்கை!

Saturday, March 14th, 2020

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு வசதிகளை ஏற்படுத்தவேண்டும் என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் கோரியுள்ளது.

சம்மேளனத்தின் செயலாளர் ஹரித அலுத்கே இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். தற்போது 17 வைத்தியசாலைகளிலேயே கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவை நாடளாவிய ரீதியில் இந்த தொற்றை கட்டுப்படுத்த போதுமானதல்ல. அநுராதப்புரம் சிறுநீரக சிகிச்சை வைத்தியசாலையில் வசதிகள் உள்ளமையால் அங்கு சிகிச்சை நிலையத்தை அமைக்கமுடியும் என்று மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் வைத்தியசாலை பணியாளர்கள் பயன்படுத்துவதற்கு 20 ஆயிரம் முகக்கவசங்களே உள்ளன. இன்னும் சில நாட்களில் அவை முடிந்துவிடும்.

எனவே கொரோனவைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முகக் கவசங்கள் அவசியம். இலங்கையில் நாள் ஒன்றுக்கு 60 ஆயிரம் முகக் கவசங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளே உள்ளன.

எனவே இந்தியாவில் இருந்து அவற்றை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவேண்டும் என்றும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் கேட்டுள்ளது.

Related posts: