நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகளுடன் அமைச்சர்களாக செயற்பட அனைவரும் இணக்கம் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!
Saturday, September 10th, 2022
சகல அமைச்சர்களும், இராஜாங்க அமைச்சர்களும், அமைச்சர்களுக்கான வரப்பிரசாதங்கள் இன்றி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளுடனேயே செயற்படுவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதனால் நாட்டிற்கு எந்த சுமையும் ஏற்படாது. மாறாக தனி ஒரு அமைச்சர் ஒரு துறையினை நிர்வகிப்பதை காட்டிலும், ஒவ்வொரு துறைக்கும் ஒரு அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர் நியமிக்கப்பட்டிருப்பதால், அதனை மேலும் முன்னேற்றுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும்.
இதனால் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் பாரிய நன்மை ஏற்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
000
Related posts:
மீண்டும் இயற்கையின் மாற்றம் தொடர்பாக எச்சரிக்கை!
வவுனியாவில் மூன்று குளங்களின் புனரமைப்பு பணிகள் ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த...
இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அரசிடம் விடுத்துள்ள கோரிக்கை!
|
|
|


