வவுனியாவில் மூன்று குளங்களின் புனரமைப்பு பணிகள் ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தலைமையில் ஆரம்பம்!

Monday, March 29th, 2021

வவுனியா மாவட்டத்தில் சுமார் 2.75 கோடி ரூபா செலவில் 3 குளங்கள் புனரமைப்பு பணிகள் ஈழ மக்கள் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவின் ‘செளபாக்கிய கொள்கையின்’ கீழ் நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் “நீர்ப்பாசன செழுமை” எனும் 5000 கிராமிய விவசாயக் குளங்கள் மற்றும் அணைக்கட்டுகளை அபிவிருத்தி செய்யும் திறன்மிகு செயற்திட்டத்தின் பிரகாரம் வவுனியா மாவட்டத்தில் பல்வேறு குளங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ள நிலையில் அதன் முதற் கட்டமாக இந்த அபிவிருத்தி பணிகளை குலசிங்கம் திலீபன் முன்னெடுத்துள்ளார்.

இதனடிப்படையில் வவுனியா வடக்கில் ஓடைவெளிக்குளத்திற்கு 94 இலட்சம் ரூபாவும், வவுனியா தெற்கில் ரங்கேத்கம குளத்திற்கு 1 கோடி ரூபாவும், வவுனியா பிரதேச பிரிவில் ஈச்சங்குளத்திற்கு 75 இலட்சரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டு குறித்த ஆரம்பப் பணிகளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான குலசிங்கம் திலீபன்  தலைமையில் இடம்பெற்றது.

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் கருத்து கூறும்போது –

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரது வழிநடத்தலில் இந்த அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த ‘செளபாக்கிய கொள்கையின்’ கீழ் வவுனியா மாவட்டத்தில் அதிகளவான குளங்கள் இதனூடாக புனரமைக்கப்படவுள்ளன.

அதன் முதற்கட்டமாக தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த மூன்று குளங்களின் அபிவிருத்தியின்போது குறித்த குளத்தை அண்டிக் காணப்படும் சிறிய நீர்ப்பாசன கால்வாய்கள் மற்றும் விவசாய பாதைகளும் புனரமைப்பு செய்யப்படவுள்ளது. அதுமட்டுமல்லாது சிறிய குளமாக காணப்படும் இந்த குளங்களின் பரப்பளவு மட்டத்தை அகலிப்பு செய்து பெரிய குளங்களாக கட்டமைத்து அதிகளவான நீரை சேகரித்து விவசாயிகளின் தேவைகளுக்கு நீரை பயன்படுத்தி வவுனியா மாவட்டத்தின் விவசாயத்தை மேம்படுத்தும் வகையிலேயே இந்த அபிவிருத்தி முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் அவர் சட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: