நாடாளுமன்றுக்கு வருகை தந்த ஜனாதிபதி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்றைய (5) நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்றிருந்தார்.
இதற்கு முன்னர் இறுதியாக கடந்த ஏப்ரல் 7 ஆம் திகதி ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு சமுகமளித்திருந்தார்.
நாடாளுமன்றிற்கு வருகைதந்த ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அருகில் அவர் அமர்ந்திருந்து நாடாளுமன்ற அமர்வுகளை அவதானித்திருந்தார்.
மேலும், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும், இன்று (05) நாடாளுமன்ற அமர்வுக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்ககது.
இதேவேளை, எதிர்க்கட்சியின் “கோட்டா கோ ஹோம்” என்ற கோசத்தை எழுப்பிய நிலையில், நாடாளுமன்ற அமர்வை, சபாநாயகர் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார். இதனை தொடர்ந்து, நாடாளுமன்றை விட்டு ஜனாதிபதி வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாடாளுமன்ற அமர்வுகளுக்கு தவறாது சமூகமளிக்கும் உறுப்பினர்கள்!
அனைத்து வீடுகளும் சோதனைக்கு உட்படுத்தப்படும்: ஜனாதிபதி!
2021 ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் எதிர்வரும் 17ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்பிக்கப்படும் - நாடாளுமன...
|
|