2021 ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் எதிர்வரும் 17ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்பிக்கப்படும் – நாடாளுமன்ற பிரதி கொறடா டிலான் பெரேரா!

Tuesday, November 10th, 2020

கட்சித் தலைவர்களின் ஒருமித்த முடிவுக்கு பின்னர் 2021 ஆம் நிதி ஆண்டுக்கான வரவுசெலவு திட்ட மூலத்தை எதிர்வரும் 17 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று கூடியிருந்த நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இந்த முடிவினை எட்டியதாக நாடாளுமன்ற பிரதி கொறடா டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

அதோடு வரவு செலவுத்திட்டம் மீதான விவாதம் குறித்து எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறும் அடுத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு எட்டப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், விவாதத்தை பத்து நாட்களாகக் குறைக்க அரசாங்கம் முன்மொழிந்தபோதும் எதிர்க்கட்சி அதற்கு எதிர்ப்பினை தெரிவித்தது.

2020 ஆம் ஆண்டிற்கான செலவினங்களுக்கான நாடாளுமன்றில் அங்கீகாரத்தைப் பெறும் ஒதுக்கீட்டு சட்டமூலம் குறித்த விவாதம் நவம்பர் 12 ஆம் திகதி நடைபெறுகிறது.

அதனைத் தொடர்ந்து நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த ஒத்திவைப்பு விவாதம் மாலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை இடம்பெறும் என்றும் இதன்போது ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: