நல்லிணக்கத்திற்கான முன்னேற்றம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் போதிய விளக்கம் வழங்கப்பட்டுள்ளது – வெளிவிவகார அமைச்சு அறிக்கை!

Friday, July 2nd, 2021

இலங்கையின் நல்லிணக்கத்திற்கான முன்னேற்றம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் பிரஸ்தாபிக்கப்பட்ட போது, போதிய விளக்கம் வழங்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உரிய மற்றும் பன்முக உரையாடலுக்காக தொடர்ச்சியாக பொறுப்புடன் செயலாற்றும் இருதரப்பு ஒத்துழைப்பின் சகல பிரிவு மீளாய்வு அடுத்த வருடம் முதல் காலாண்டில் ஒன்றிணைந்த ஆணைக்குழுவை கூட்டி கலந்துரையாட எதிர்பார்க்கப்படுகிறது என்றும் என்றும் வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் ஜீ.எஸ்.பி கண்காணிப்பு சுழற்சி தொடர்பிலான பின்னணிக்காக விரிவான பதிலை இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஆணைக்குழுவிற்கு அளித்துள்ளது என, இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை பயங்கரவாத தடைச் சட்டத்தின் சில விதிகளை மீள ஆராய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் வெளிவிவகார அமைச்சு ஐரோப்பிய ஒன்றியத்திடம் அறிவித்துள்ளது.

அண்மையில் இலங்கையில் பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படவேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

இதில், இலங்கையில் நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கான அழுத்தங்களை பிரயோகிக்க ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்தநிலையிலேயே இலங்கையின் நல்லிணக்கத்திற்கான முன்னேற்றம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் போதிய விளக்கம் வழங்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts:

பொதுமக்களின் கவனக்குறைவும் பொறுப்பின்மையுமே கொரோனா தொற்று அதிகரிக்க காரணம் - பொது சுகாதார பரிசோதகர்...
வெளிநாட்டு தொடர்புடைய தமிழ் மக்கள் சிலரே இராணுவத்திற்கு எதிராக பொய் பிரசாரம் செய்கின்றனர் - யாழ்ப்ப...
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமையை நீக்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை - அமைச்சர்...