வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்ட கடனை மீளச் செலுத்தும் இயலுமை எமக்குள்ளது – அஜித் நிவாட் கப்ரால்!
Sunday, November 14th, 2021
நாட்டுக்கு நன்மை ஏற்படும் வகையில் கடன் மறுசீரமைப்பை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
பாதீடு தொடர்பில் தொலை காணொளி ஊடாக மத்திய வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் பங்கேற்று கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்ட கடனை மீளச் செலுத்தும் இயலுமை எமக்குள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் நாட்டுக்கு நன்மை பயக்கும் வகையில் கடன் மறுசீரமைப்பை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
உதாரணமாக கடன் எல்லையை நீடித்தல் மற்றும் குறைந்த வட்டிக்கு கடனை பெறுதல் உள்ளிட்ட செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பொறியியல் பீடங்களுக்கு அதிக மாணவர்களை உள்ளீர்க்கை - கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ்!
மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களை அழைப்பது தொடர்பான சுற்றுநிருபம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பு -...
உள்ளூராட்சித் தேர்தல் - வேட்புமனுக்கள் எதிர்வரும் 18ஆம் திகதிமுதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படு...
|
|
|


