நாடாளுமன்றில் முக்கிய நான்கு சட்ட மூலங்கள் சமர்ப்பிக்கப்படும் – அமைச்சர் தினேஸ் குணவர்தன!
Tuesday, July 6th, 2021
இந்த வாரத்தில் நாடாளுமன்றில் நான்கு முக்கியமான சட்ட மூலங்கள் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அவைத் தலைவரும், வெளிவிவகார அமைச்சருமான தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஜெனரல் சேர் ஜோன் கொதலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலம், 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு துரிதமாக வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் சட்ட மூலத் திருத்தம், குற்றவியல் சட்டத் திருத்தம் மற்றும் சித்திரவதைகள் துன்புறுத்தல்கள், கொடூர தண்டனை விதித்தல்கள் என்பன குறித்த சர்வதேச பிரகடனம் அமுல்படுத்தும் சட்ட மூலம் ஆகியனவே இவ்வாறு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்ற உத்தேசித்துள்ளதாக அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்றையதினம் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பித்துள்ளதுடன் எதிர்வரும் 9 ஆம் திகதிவரை அமர்வுகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை வரலாற்றில் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபாய்!
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 2000 வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை - ஜனாதிபதி ரணில் விக்கிர...
வெற்றிடமாக உள்ள 4 ஆயிரம் கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு விரைவில் நடவடிக்கை - இராஜாங்க...
|
|
|


