குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 2000 வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

Monday, October 3rd, 2022

கிராமிய மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வீட்டுத் தேவைகளை திறமையாகவும் மனிதாபிமானமாகவும் தீர்ப்பதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

75ஆவது சுதந்திர தினத்துடன் இணைந்து குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான 2000 வீட்டுத் தொகுதிகளை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இத்திட்டம் நகர்ப்புற மக்களுக்கு மட்டும் பயன் அளிக்காமல், அரை நகர்ப்புற மக்களுக்கும் பயனளிக்கும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இன்று கொண்டப்படும் உலக வாழ்விட தினத்தை முன்னிட்டு செய்தியை வெளியிட்ட ஜனாதிபதி, வளர்ந்து வரும் பிரச்சினையை வெற்றிகரமாக கையாளக்கூடிய நீண்டகால கொள்கைகள், சட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்கள் காலத்தின் தேவை என்றும் தெரிவித்தார்.

நாம் சுதந்திரம் பெற்று அரை நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இலங்கையை விட குறைந்த சமூகப் பொருளாதார நிலையைக் கொண்டிருந்த பிராந்தியத்திலும் உலகிலும் பல நாடுகள் ஏற்கனவே எம்மைக் கடந்து சென்றுவிட்டன. ஏற்றுமதி-தலைமையிலான புதுமையான பொருளாதாரத்தில் இருந்து நிலையான வளர்ச்சியை அடைய உதவும் நீண்டகால தேசிய கொள்கைகள் இல்லாத ஒரு நாட்டை அபிவிருத்தி செய்வது சவாலான பணியாகும்.

75 ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்தின் மூலம், நமது அடுத்த 25 ஆண்டு திட்டத்தில், நம் அன்புக்குரிய குடும்பத்துடன் சொந்த வீட்டில் மகிழ்ச்சியாக வாழ வழிவகுக்கும் ஒரு சமுதாயத்தை உருவாக்குவோம் என்று நாம் அனைவரும் நம்புகிறோம். இந்த விருப்பத்தை நனவாக்க ஒரு அரசாங்கமாக நாங்கள் ஏற்கனவே பணியாற்றி வருகிறோம். 75ஆவது சுதந்திர தினத்துடன் இணைந்து குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 2,000 வீடுகள் கட்டும் பணியை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் நகர்ப்புற மக்களுக்கு மட்டுமல்லாது மக்களுக்கும் பயனளிக்கும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: