நாடாளுமன்றம் கலைப்பு – ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான மனுக்களின் தீர்ப்பு இன்று!
Thursday, December 13th, 2018
நாடாளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று (13) வழங்கப்பட உள்ளது.
குறித்த மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று (13) மாலை 4 மணிக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதம நீதியரசர் நளின் பெரேரா உட்பட7 பேர் அடங்கிய நீதிபதிகள் குழுவினால் இந்த மனுக்கள் தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
இந்த மனுக்கள் தொடர்பான விசாரணை டிசம்பர் 4 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரையில் இடம்பெற்றது.
குறித்த மனுக்களை ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட பல கட்சிகள் இணைந்து தாக்கல் செய்திருந்தன.
இதேவேளை வரலாற்று சிறப்பு மிக்க வழக்கின் தீர்ப்பிற்காக, உள்நாடு மற்றும் சர்வதேச நாடுகள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
காங்கேசன்துறையருகே சூறாவளி மையம்!
புதிய கடற்படைத் தளபதி நியமனம்!
பொதுப்போக்குவரத்தின் போது சமூக இடைவெளி அவசியம் - தொடருந்து திணைக்களம் விசேட நடவடிக்கை!
|
|
|


