நாடாளுமன்றம் இன்று கூடுகின்றது!
Tuesday, May 7th, 2019
நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இன்று நாடாளுமன்றில் நடைபெறவுள்ளது.
எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு அமைய இந்த விவாதம் இன்று 1 மணி முதல் 6 மணி வரையில் நடைபெறவுள்ளது.
நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு நிலைமை, சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளது
Related posts:
குத்தகைக்கு பெற்ற A-330 விமானத்தை இலங்கையிடம் மீளவும் ஒப்படைப்பதற்கு பாகிஸ்தான் தீர்மானம்!
20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு ஜீன் மாதம் அரச நியமனம் - தேசிய கொள்கை பொருளாதார விவகார அமைச்சின் மேலதிக ...
இன்றுமுதல் நடைமுறையானது திருத்தப்பட்ட தொடருந்து கட்டணம் - இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகள், திங...
|
|
|


