முதல் தடவை தடுப்பூசி பெற்றுக்கொண்டோர் கட்டாயம் மீண்டும் தடுப்பூசி பெறவேண்டும் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்து!

Friday, February 19th, 2021

ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனிகா முதலாவது தடுப்பூசியினை பெற்றுக்கொண்டவர்கள் இரண்டாவது ஊசியையும் கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவ நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

முதலாவது தடுப்பூசியினை ஏற்றியதன் பின்னர் 10 முதல் 12 வாரங்களுக்கு இடையில் இரண்டாவது தடுப்பூசியினையும் செலுத்திக்கொள்ள வேண்டும்.

எனவே இரண்டாவது கெவிட்19 தடுப்பூசியினை கட்டாயம் பெற்றுக்கௌ்ள வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஊடகவியலாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் ஜகத் பீ விஜேவீரவினால் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு எழுத்துப்பூர்வமாக இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் பொதுமக்களுடன் தொடர்புபட்டுள்ளதுடன் நாட்டின் பல்வேறு பாகங்களுக்கு பயணம் செய்கின்ற நிலையில் அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்குவது அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

அரச, தனியார் நிறுவன ஊழியர்களின் தகவல்களை புதுப்பிக்குமாறு பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன கோரிக்கை!
சிறு போகத்தின் போது கைவிடப்பட்டுள்ள 50 ஆயிரம் ஏக்கர் வயலில் மீண்டும் பயிர்ச்செய்கை - விவசாய அபிவிருத...
அரச காணிகளை தனிநபர்கள் அபகரிக்கு முயற்சி – தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈ.பி.டி....