வடக்கு, கிழக்கு பொலிஸ் நிலையங்களின் தமிழிற்கே முதலிடம் – அதிரடி உத்தரவு!

Thursday, December 12th, 2019

வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களின் பெயர்ப் பலகைகளிலும் தமிழ் மொழிக்கு முன்னுரிமையளிக்கும்படி பதில் பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய  உத்தரவிட்டுள்ளார்

செப்ரெம்பர் 6ஆம் திகதி அரச கரும மொழிகள் ஆணைக்குழுவினால் சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளரிற்கு இதற்கான பரிந்துரை வழங்கப்பட்டிருந்தது. இதன் நகல் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் இந்த புதிய உத்தரவு இடப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் அதிகளவில் வாழும் வடக்கு, கிழக்கில் அரச கரும மொழிகளில் ஒன்றான தமிழே, பெயர்ப்பலகைகளில் முன்னுரிமை பெற்றிருக்க வேண்டுமென அரச கரும மொழிகள் ஆணைக்குழு பரிந்துரைத்திருந்தது

பொலிஸ் என குறிப்பிடாமல் காவல்த்துறை என தமிழில் குறிப்பிடும்படி அரசகரும மொழிகள் ஆணைக்குழு பரிந்துரைத்திருந்தது. இதன்படி, அறிவித்தல் பலகைகளில் இனிமேல் குறிப்பிடப்படுமென தெரிவிக்கப்படுகிறது.

Related posts: