அரச நிறுவனங்கள் 88913 கோடி ரூபா கடன் !

Tuesday, August 1st, 2017

அரசின் கீழ் இயங்கும் 42 வணிக நிறுவனங்கள் 88913 கோடி ரூபா கடனை வங்கிகளுக்கு செலுத்த வேண்டியுள்ளதாக நிதி மற்றும் தகவல் ஊடகத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள காலாண்டு நிதி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, இலங்கை மின்சார சபை 3174 கோடி ரூபாவும், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 38255 கோடி ரூபாவும், இலங்கை துறைமுக அதிகார சபை 23765 கோடி ரூபாவும், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை 4226 கோடி ரூபாவும், வரையறுக்கப்பட்ட விமானநிலையம் மற்றும் விமான சேவை கம்பனி 3852 கோடி ரூபாவும், ஸ்ரீலங்கன் எயார்லைன் கம்பனி 9158 கோடி ரூபாவும் வங்கிகளுக்கு செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

கள் உற்பத்தி அதிகரித்தும் விற்பனை பெரும் வீழ்ச்சி - பியரும் தாக்கம் செலுத்துகின்றதென கூறுகிறது பனை த...
அர்ப்பணிப்பும் சகிப்புத் தன்மையும் மிக்க இளைஞர்களை உருவாக்குவதே எமது நோக்கம்  - ஈ.பி.டி.பியின் யாழ்....
இந்தியா - இலங்கை இடையிலான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளில் புதிய அத்தியாயம் உருவாக்கப்பட்டுள்ள...