பொறுப்பின்றி மக்கள் செயற்பட்டால் நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய நிலை ஏற்படலாம் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

Thursday, December 17th, 2020

சுகாதார வழிமுறைகளை பின்பற்றாது மக்கள் பொறுப்பின்றி செயற்பட்டால், மீண்டும் நாட்டை முழுமையாக முடக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் இந்த நிலை நீடித்தால் குறிப்பாக கடுமையான நடமாட்டக் கட்டுப்பாடுகள் விதிக்க நேரும்  என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செய்தி தொடர்பாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு பிரதேசம் தனிமைப்படுத்தப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டால், உடனடியாக அங்குள்ள மக்கள் வேறு இடங்களுக்கு செல்ல முயற்சிக்கின்றனர் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனவே, இதனை தடுப்பதற்கு பாதுகாப்பு தரப்பினர் திறமைபெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதுடன், சுகாதாரத் துறையினரும் வினைதிறனாக செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் மக்களிடம் இருந்து இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகளை எதிர்பார்க்கவில்லை என தெரிவித்துள்ள அவர், இந்த நிலைமை தொடர்ந்தால் மீண்டும் நாடு முழுவதையும் முடக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம் என்றும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

சகல முச்சக்கரவண்டிகளிலும் கட்டண அளவீட்டு கருவியை பொருத்துவது கட்டாயம் – இராஜாங்க அமைச்சர் திலும் அமு...
டொலர்களில் சுங்கத் தீர்வையை செலுத்தி வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு மத்திய வங்கி, அரசாங...
அளவுக்கதிக சிறப்பு சலுகைகளை பெறுபவர்களே ஆர்ப்பாட்டத்தில் - அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!