நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதி உத்தரவு!
Tuesday, May 10th, 2022
நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்த நாளை நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.
நாளை காலை 10.00 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், தற்போதைய சூழ்நிலையில் கூட்டத்தின் நேரம் மாறலாம் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.
கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது ஏற்பட்ட அமளிதுமளி காரணமாக எதிர்வரும் 17 ஆம் திகதி வரை நாடாளுமன்ற செயற்பாடுகள் ஒத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ். நல்லூரில் வாள்வெட்டு; நான்கு பிள்ளைகளின் தந்தை படுகாயம்
கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 77 ஆயிரத்து 711 ஆக அதிகரிப்பு!
13 ஆம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது - இந்திய வெள...
|
|
|


