நவராத்திரி தினத்தை முன்னிட்டு இந்து சமய விழுமியங்களை ஊக்குவிக்கும் முகமாக 40 ஆலயங்களுக்கு தலா 50 ஆயிரம் நிதியுதவி வழங்கிவைத்தார் பிரதமர்!

Thursday, October 15th, 2020

நவராத்திரி தினத்தை முன்னிட்டு இந்து சமய விழுமியங்களை ஊக்குவிக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 40 இந்து ஆலயங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபா நிதி பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் வழங்கிவைப்பட்டுள்ளது.

இந்நிதி வழங்கும் நிகழ்வு இன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இதன்போது 10 ஆலய பரிபாலன சபைத்தலைவர்களுக்கான நிதியுதவிகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கி வைத்துள்ளார்.

நிகழ்வில் கடற்றொழில் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, தோட்ட வீடமைப்பு உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், புத்த சாசன, மத விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

மாசற்ற அரசியல் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியும் -ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன...
தேர்தல் ஆணைக்குழு நாளை விசேட சந்திப்பு: நாளைமறுதினம் தேர்தல் நடைபெறும் திகதி வெளிவர வாய்ப்பு!
ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொள்ளும் முதலாளித்துவ அரசியல் கட்சிகளிடம் பில...