பல்கலைக்கு அனுமதிக்கப்படும் வரையான 10 மாதங்களுக்கும் மேலான காத்திருப்பு இடைவெளியை நீக்குவதற்கு நடவடிக்கை – கல்வி அமைச்சர் அறிவிப்பு!
Sunday, December 19th, 2021
க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டதன் பின்னர் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படும் வரையான 10 மாதங்களுக்கும் மேலான காத்திருப்பு இடைவெளியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அவிசாவளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வருடத்திற்கான க.பொ.த உயர்தரம், க.பொ.த சாதாரண தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள், திட்டமிடப்பட்ட திகதிகளில் எவ்வித மாற்றமுமின்றி நடைபெறும் எனவும் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையர்களுக்கான சுற்றுலா விசா வழங்கலை மீண்டும் ஆரம்பித்தது இந்தியா!
அடுத்த ஆண்டு தேர்தல் வருடம்' - ரணிலை பொது வேட்பாளராக ஏற்றுக்கொள்ள அனைவரும் தயார் - அமைச்சர் மனுஷ நாண...
அன்று மைத்திரிக்கு ஆதரவளிக்கும்போது சமஸ்ரி கோரிக்கையை முன்வைக்காத சம்பந்தன் இன்று கரிசனை கொள்வது ஏன்...
|
|
|


