ஒப்பந்த அடிப்படையில் பகுதி நேரமாக நியமிக்கப்பட்ட  ஆங்கில ஆசிரியர்கள் உணவு ஒறுப்பில் குதிக்க முடிவு

Thursday, December 14th, 2017

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியகனம் செய்யப்பட்ட நியமனம் செய்யப்பட்ட ஆங்கில ஆசிரியர்கள் தமக்கு நிரந்தர நியமனங்களை வழங்குமாறு கோரி உணவு ஒறுப்புப்போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் எனத்தெரிவித்தனர்.

இதுபற்றி அவர்கள் மேலம் தெரிவித்ததாவது: யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் நிலவும் ஆங்கில ஆசிரியர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 2011அம் ஆண்டு மாகாணக்கல்வி அமைச்சால் போட்டிப்பரீட்சை ஒன்று நடாத்தப்பட்டது. ஜீ.சி.ஈ உயர்தரத்தில் ஆங்கில பாடத்தில் “ஏ” தரத்தில் சித்தியடைந்ததவர்களும் ஜீ.சி.ஈ உயர்தரத்தில் ஆங்கிலபாடம் சித்தியடைந்தவர்களும் இந்தப்பரீட்சையில் தோற்றமுடியும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தப்பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 65 பேர் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்ட்டோம். அதனடிப்படையில் பாடசாலைகளில் 2 மணித்தியாலங்கள் கடமையாற்ற வேண்டும். இதற்கமைய 3ஆயிரம் ருபா வழங்கப்பட்டது. இரண்டுமணித்தியாலங்கள் கடமை நெரம் என்றாரும் பாடசாலைகளில் உள்ள நேர அட்டவணையின் படி எமக்கு கூடிய மணித்தியாலங்கள் கடமையாற்ற வேண்டிய தேவை ஏற்ப்பட்டது. ஆனால் நாங்கள் மனம் சலிக்காமல் குறிப்பாக கிராமப்புறப்பாடசாலைகளில் நேரம் முழுவதம் கடமையாற்றி வருகின்றோம்.

2006 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்ட காலப்பகுதில்  இவ்வாறு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட அசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது. ஆனால் 2011ஆம் ஆண்டு தொடக்கம் இன்றவரை கடமையாற்றும் எமக்கு எந்தப்பதிலும் இல்லை.

ஆனால் 2014அம் ஒப்பந்த அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட பகுதிநேர  ஏனைய பாடங்களைக்கற்ப்பிக்கம்  ஈசிரியர்களுக்கநிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் இரண்டவாரங்களுக்கு முன்பு கொழும்பு கல்வியமைச்சால் நேர்முகத்தேர்வு ஒன்று நடைபெற்றது. ஆகவே இவர்களைப்போலN எமக்கும் நிரந்தர நியமனங்களை வழங்க நடவெடிக்கை எடக்கப்படவேண்டும். இல்லாத விடின் எமது பிரிவில் உள்ள 54 பெரம் சாகும் வரை உணவு ஒறுப்புப்போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்றார்.

Related posts:


வடக்கு கிழக்கில் சிறுதொழில் முயற்சிகளை அதிகரிக்க நடவடிக்கை - தேசிய ஒருமைப்பாடு மற்றும் மறுசீரமப்பு அ...
நாளைமுதல் எதிர்வரும் முதலாம் திகதி வரை மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள...
மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் - போதகர் ஜெரோமின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் குறித்து உடனடியாக சிஐடி...