நள்ளிரவுமுதல் குறைக்கப்பட்டன லிட்ரோ எரிவாயு மற்றும் சிமெந்து பொதியின் விலைகள் – புதிய விலைகளும் அறிவிப்பு!

Wednesday, October 5th, 2022

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலையை லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 12.5 கிலோ எரிவாயுவின் விலை 271 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 4280 ரூபாவாக நிர்ணயிக்கப்படடுள்ளது.

அத்துடன், 5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு கொள்கலன் விலை 107 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1720 ரூபாவாகும்.

மேலும் 2.3 கிலோ லிட்ரோ எரிவாயு கொள்கலனின் விலை 48 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 800 ரூபாவாகும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை

கடந்த நள்ளிரவுமுதல் 50 கிலோகிராம் சங்ஸ்தா சிமெந்து மூடை ஒன்றின் விலையை, 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அதன் உற்பத்தி நிறுவனம் அறிவித்துள்ளது

கட்டிட நிர்மாணத்துறையை முன்கொண்டு செல்லும் நோக்கில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன்படி, 3,200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் 50 கிலோகிராம் சிமெந்து மூடை ஒன்று, 3,100 ரூபாவாக விலை குறைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: