சிறப்புற நடந்து முடிந்த சந்நிதியானின் இரதோற்சவம்!

Tuesday, September 1st, 2020

வரலாற்று சிறப்பு மிக்க அன்னதானக் கந்தன் என அழைக்கப்படும் யாழ் தொண்டமானாறு செல்வச் சந்நிதியான் மஹோற்சவத்தின் முத்தேர் இரதோற்சவம் இன்று பக்திப்பூர்வமாக இடம்பெற்றது.

கருவறையில் வீற்றிருக்கும் சந்நிதியானுக்கும் விநாயகர் மற்றும் அம்மனுக்கும் முருகன் வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு விசேட அபிசேங்கள், ஆராதணைகள் என்பன இடம்பெற்று எம்பெருமான் சமேதராக இரதோற்சவத்தில் வீற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

கடந்த 18 ஆம் திகதி மஹோற்சவம் ஆரம்பமான நிலையில் இன்றையதினம் தேர்திருவிழா நடைபெற்றது. நாளை தீர்த்த உற்சவத்துடன் மஹோற்சவம் நிறைவுபெறும்.

சுகாதார கட்டுப்பாடுகள் அதிகம் காணப்பட்டபோதிலும் வடக்கின் பல பாகங்களிலிருந்தும் வருகைதந்த பக்தர்கள் சுகதார நடைமுறைகளை பின்பற்றி திருவிழாவில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்பதாக சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்களால் வருகைதந்திருந்த பக்தர்களுக்கு முகக்கவசங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: