கருத்து வேறுபாடுகளை சகித்துக்கொள்வதில் பல வருடம் எனக்கு உள்ளது அனுபவமுண்டு – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Wednesday, April 27th, 2022

கருத்து வேறுபாடுகளை சகித்துக்கொள்வதற்கு பல ஆண்டுகளாக அரசியலில் தாம் அனுபவம் பெற்றுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள், ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களின் சங்கத்தினருடன் அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஒரு பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும். காலிமுகத்திடலில் உள்ள குழுக்களுக்கும், அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களுக்கும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தோம். இன்றும் அந்த அழைப்பை விடுக்கிறேன்.

அது மாத்திரமன்றி நாடாளுமன்றத்தில் எங்களுடன் இணைந்து அரசாங்கத்தை அமைத்து அமைச்சுப் பொறுப்புக்களை வகிக்குமாறு எதிர்க்கட்சிக்கும், அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தோம்.

அந்த வாய்ப்பை நழுவவிட்டுவிட்டு, ஊடகங்கள் முன் வந்து நாம் நாட்டை நேசிக்கிறோம் என்று கூறுபவர்களா, உண்மையிலேயே நாட்டை நேசிக்கிறார்கள் என்று கேட்க வேண்டி ஏற்பட்டுள்ளது.

போராட்டக்காரர்களுடன் எங்களுக்கு எந்த முரண்பாடும் இல்லை. நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை ஒவ்வொன்றாக தீர்த்து வருகிறோம்.

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற அமைப்புகளும் நட்பு நாடுகளும் இந்த நேரத்தில் எமக்கு உதவ முன்வந்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts: