நடனத்தால் யாழ்.பல்கலையில் அடிதடி-  மூடப்பட்டது விஞ்ஞானபீடம்!

Saturday, July 16th, 2016

யாழ். பல்கலைக்கழக மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக பல்கலைக்கழக விஞ்ஞானபீடம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்தள்ளார்.

இதேவேளை இன்று இடம்பெற்ற மோதல் காரணமாக 10 மாவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை விஞ்ஞானபீட வளாகத்தில் இடம்பெற்றன.

வழமையாக தமிழர் பாரம்பரிய முறையான மேள தாளத்துடன் மாணவர்களை வரவேற்கின்ற போதிலும், இன்றைய தினம் தமிழ் மாணவர்களால் மேளதாள கலைஞர்கள் அழைக்கப்பட்டிருந்த நிலையில் சிங்கள மாணவர்கள் கண்டிய நடனக் கலைஞர்களை அழைத்துள்ளனர்.

சிங்கள மக்களின் பாரம்பரிய நடனமான கண்டிய நடனத்துடன் சிங்கள மாணவர்களை வரவேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நடவடிக்கையால் இரண்டு மாணவ குழுக்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் பின்னர் கைகலப்பாக மாறியது.

இதன்போது பொல்லுகள் தடிகள் சகிதம் சிங்கள மாணவர்களும், தமிழ் மாணவர்களும் மோதலில் ஈடுபட்டனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களையும் மாணவர்கள் அச்சுறுத்தி விரட்டியடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் மாணவர்களுக்கிடையிலான மோதல் தீவிரமடைந்ததை அடுத்து அங்கு ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்டு நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

எனினும் பொலிசார் சிங்கள, தமிழ் மாணவர்களை தனித்தனியே பிரித்து வைத்திருப்பதாகவும்  இதே வேளை இந்த மோதல்களின் போது விஞ்ஞானபீட கட்டடமொன்றும் அடித்து நொருக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: