கொட்டும் மழைக்கு மத்தியிலும் சிறப்பாக நடைபெற்ற ஈழத்து சிதம்பரத்தின் வருடாந்த தேர் உற்சவம்!

Saturday, December 22nd, 2018

கொட்டும் மழைக்கு மத்தியில் ஈழத்துச் சிதம்பரம் என்று வர்ணிக்கப்படும் யாழ் காரைநகர் சிவன் கோவிலின் வருடாந்த மஹோற்சவத்தின் பஞ்சரத தேர் திருவிழா இன்று வெகுசிறப்பாக நடைபெற்றது.

ஈழத்திலுள்ள சிவன் ஆலயங்களில் மிகவும் பழமையும் தொன்மையும் வாய்ந்த கரைநகர் சிதம்பரநாதர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் பஞ்சரத தேர் பவனித்திருவிழா இன்று கொட்டும் மழையிலும் அடியவர்களின் பக்தி ஆரவாரங்களுக்கு மத்தியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

ஆலயப்பிரதம குரு தலைமையில் காலை ஆலயத்துள் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜைகளைத் தொடர்ந்து சிதம்பரநாதர், பிள்ளையார் முருகன் ஜயப்பன் துர்க்கை அம்மன் சகிதம் ஆலயத்திற்கு வெளியே வருகைதந்து ஊரே கூடி வடம் பிடிக்க தேர்களில் ஏறி பக்தர்களுக்கு ஆசி வழங்கியபடி வெளி வீதியுலா வந்தார்.

பக்தர்கள் தீபம் காட்டி தேங்காய் உடைத்து தீச்சட்டிகள் ஏந்தி தமது நேர்த்திக்கடன்களை செலுத்தி சிதம்பர நாதரின் அருளைப்பெற்றுக்கொண்டனர்.

viber image3

viber image2

viber image1

Related posts: