குறிக்கோளுக்கு மாறான கோசங்களுக்கு பின்னால் செல்வது நிறுத்தப்பட வேண்டும் – மே தின உரையில் ஈ.பி.டி.பியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன் எடுத்துரைப்பு!

Tuesday, May 2nd, 2023

உழைக்கும் மக்கள் தமது நோக்கங்களுக்கு மாறான சுயநல அரசியல் வாதிகளின் கோசங்களுக்கு பின்னால் செல்வதை கைவிட்டு அனைத்து மக்களும் சம உரிமை பெற்று வாழவேண்டும் என்ற கொள்கையை கொண்டுள்ள கட்சி ஈழ மக்கள் ஜனநாகக் கட்சியின்  பின்னால் அணிதிரள வேண்டும் என வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் வை. தவநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.

வழமைபோன்று வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஈழ மக்கள் ஜனநாகக் கட்சியின் மேதின கூட்டம் அந்தந்த மாவட்டங்களின் கடட்சியின் நிர்வாக செயலாளர்கள் தலைமையில் நேற்றையதினம் நடைபெற்றது.

இதில்  கிளிநொச்சி மாவட்ட கட்சி அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட நிர்வாக பொறுப்பாளரும் வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான தவநாதன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில் –

தொழிலாளர்களின் உரிமைகள் உலகெங்கிலும் இருந்த இடதுசாரிய சிந்தனையாளர்களாலும், போராட்டக் காரர்களாலும் வலுப்படுத்தப்பட்டு  இன்று தொழிலாளர் உரிமைகள் தொழிலாளர் நலசட்டங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இ,து தொழிலாளர்களின் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றியாகும். இலங்கையிலும் இடதுசாரி இயக்க முன்னோடிகளின் அர்ப்பணிப்பான தலைமைத்துவத்தின் கீழ் இடம்பெற்ற போராட்டங்கள் தொழிலாளர்களின் விடுதலையை சாத்தியப்படுத்தியதுடன் சாதிய எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்து அனைத்து மக்களுக்கும் சம உரிமை கிடைப்பதற்கான ஏதுநிலையை உருவாக்கினார்கள்.

அவ்வகையில் இன்று நடைமுறையில் அனைத்து மக்களும் சம உரிமை பெறுவதற்கான கொள்கையை கொண்டுள்ள கட்சியாக ஈழ மக்கள் ஜனநாகக் கட்சி விளங்குகின்றது அத்டதுன். அதனை கொள்கையாகக் கொண்டு நடைமுறையிலும் செயற்படுத்தி வருகின்றார் எமது தலைவர் தோழர் டக்ளஸ் தேவானந்தா.

இதேவேளை 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்த தொழிலாளர் வர்க்கத்தைவிட புதிய தொழிலாளர் அணியினர் தற்போது உருவாகியுள்ளனர். குறிப்பாக நமது நாட்டில் ஆடை தொழிற்சாலை ஊழியர்கள், தகவல் தொழில்நுட்பதுறை ஊழியர்கள்,கடைச் சிப்பந்திகள், அன்றாட கூலித் தொழிலாளர்கள் போன்றவகையினரின் தொழில் உரிமைகள் அடிமட்டத்திலேயே காணப்படுகின்றனது

அத்துடன் உலகநாடுகள் முழுவதும் உள்ள இராணுவம், மற்றும் பொலிஸ் துறைகளிலும் கூட அவர்கள் தொழில் உரிமைகளை அனுபவிக்கமுடியாதவர்களாக அதை பேசமுடியாதவர்களாக இருக்கின்றனர்.

அத்துடன் இந்த தசாப்தத்தில் ஏற்பட்டபெரும் நோய் தொற்று,பால்கன் யுத்தம் போன்றவற்றால் உலகளாவிய பொருளாதார நெருக்கடி என்பன ஏனைய நாட்டு மக்களைப் போலவே எமது நாட்டு மக்களையும் நெருக்கடிக்குள்ளாக்கி உள்ளது.

துரதிஸ்டவசமாக எமது நாட்டிலுள்ள சில அரசியல் கட்சிகள் அதனை குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தி எமது மக்களை பிழையான வழிக்கு திசை திருப்பி இந் நாட்டுமக்களின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த முயற்சித்தார்கள்.

இருப்பினும் அரசாங்கமானது. ஜனாதிபதிரணில் விக்ரமசிங்க தலைமையின் கீழ் நாட்டை மீளவும் கட்டியெழுப்பும் முயற்சியில் படிப்படியாக முன்னேறிவருகின்றது. இச்சந்தர்ப்பத்தில் நாட்டு மக்கள் சுயநல அரசியல் கட்சிகளின் நோக்கத்திற்கு பலியாகாமல் இவ் அரசுடனும் அதன் வடமாகாண தலைமயாகிய எமது தலைவர் அவர்களின் கரங்களை பலப்படுத்தி பொருளாதார சிக்கலில் இருந்து மீளவேண்டும் எனகேட்டுக்கொள்கிறேன்.

எதிர்கால போராட்டமானது மேற்குறிப்பிட்ட குரலற்ற மக்களின் தொழில் உரிமைகளுக்காகவும் ஒடுக்குமுறைகளில் இருந்து விடுதலை பெறுவதற்குமான போராட்டங்களாகவே இருக்க வேண்டும் என்பதுடன் உழைப்பாளர்கள் தங்களுடைய அரசியல் கோசங்களுக்கு மாறான கோசங்களுக்கு பின் செல்லாமல் சொல்லிலும் செயலிலும் அனைத்து மக்களையும் சமமாக மதிக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நடைமுறைச் சாத்தியமான கொள்கைகளை பின்பற்றுவதே அவர்களின் எதிர்கால மீட்சிக்கான வழியென வரலாறு நிரூபித்துள்ளது.

எமது கோசமான அன்றாட பிரச்சினைக்குத் தீர்வு,அபிவிருத்தி, அரசியல் உரிமை ,வற்றின் ஊடாக மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற இலக்குடன் பயணிக்க அனைவரும் உறுதிபூணுவோம் எனஅவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: