சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 100 மில்லியன் அமெரிக்க டொலர் மேலதிக கடனைப் பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி!

Wednesday, September 22nd, 2021

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து தடுப்பூசிகளைப் பெறுவதற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் மேலதிக கடனை வழங்குவதற்கு உலக வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, குறித்த மேலதிக நிதியிடல் வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்காக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கொரோனா  மூலோபாய தயார்படுத்தல்கள் மற்றும் பதிலளிப்புகள் வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையில் கொவிட் 19 அவசர பதிலளிப்புக்கள் மற்றும் சுகாதாரத்துறையை தயார்படுத்தல் கருத்திட்டத்திற்காக இந்தக் கடனைப் பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த மேலதிக தொகை, 14 மில்லியன் பைசர் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கும் தடுப்பூசி வழங்கும் பணிக்கு ஏற்புடைய ஏனைய செலவுகளுக்குமான நிதியிடலுக்காகத் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: