நல் வழிக்கு உதவக்கூடியவர்களையே நண்பர்களாகக்கொள்ள வேண்டும் – ஜனாதிபதி!

Sunday, November 27th, 2016

தன்னைவிட அறிவு, மதிநுட்பம் மற்றும் அனுபவங்களைக் கொண்ட நல் வழிக்கு உதவுவோரையே நெருங்கிய நண்பர்களாக கொள்ள வேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கோட்டே ஆனந்தா கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் நேற்று (26); கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.

இறை வழிபாடுகளைத் தொடர்ந்து கல்லூரியின் பழைய மாணவர்களான முப்படை உயரதிகாரிகளுடன் இணைந்து கல்லூரியிலுள்ள போர் வீரர் நினைவுத் தூபிக்கருகில் உயிரிழந்த வீரர்களுக்காக அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி, இதனை நினைவுகூரும் முகமாக வெண்சந்தண மரக்கன்று ஒன்றை நாட்டினார்.

இலங்கையின் நீதிமன்ற வரலாற்றில் முதற்தடவையாக ஒரே முறையில் கொலைச் குற்றச்சாட்டு  சம்பவத்திற்காக  பதினெட்டுப் பேருக்கு நேற்றைய தினம் (25) மரணதண்டனை வழங்கப்பட்டது. இதன் பின்னர், தண்டனைக்கு உள்ளானவர்களின் குடும்பத்தவர்கள் ஒவ்வொருவர் மீது குற்றஞ்சாட்டிய விதத்தை நினைவூட்டிய ஜனாதிபதி, தகுதியில்லாத நபர்களுடன் நட்புக் கொள்வதனால் ஏற்படும் பாதிப்பை சுட்டிக்காட்டினார்.

தற்போதய நவீன தொழில்நுட்பத்துடன் இளைஞர்கள் இணைந்துள்ளனர். ஆனால் நாம் எதிர்பார்க்கும் உலக தொழில்நுட்ப் இல்லையென்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சில நாட்களுக்கு முன்னர் நாட்டின் பிரபல ஆண்கள் பாடசாலையொன்றின் உள்ளக பிரச்சினைக்காக பாடசாலைக்கு வெளியே மாணவரைத் தாக்கிய சம்பவம், பாடசாலை மாணவர்களுக்கு பொருத்தமற்ற, பண்பற்ற நடத்தையாகுமெனவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார்.

பாடசாலையில் விசேட திறமைகனை வெளிப்படுத்திய மாணவர்களுக்கும் பாடசாலையின் பழைய மாணவர்களான மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய, முன்னாள் கோட்டே நகரசபைத் தலைவர் ஜனக ரோகண, மேல் மாகாண சபை உறுப்பினர் ஜகத் குமார ஆகியோருக்கும் ஜனாதிபதி விருதுகளை வழங்கினார்.

maithiripala-55445d1

Related posts: