நல்லிணக்க முயற்சிகள் குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளிநாட்டு இராஜதந்திரப் பிரிவினருக்கு விளக்கம்!
Thursday, August 17th, 2023
அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகள் குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு நேற்று வெளிநாட்டு இராஜதந்திரப் பிரிவினருக்கு விளக்கமளித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன ஆகியோர் வெளிவிவகார அமைச்சில் நேற்று இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்தனர்.
இதன்போது நாட்டின் தற்போதைய வளர்ச்சிகள் குறித்து இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
நல்லிணக்கத்தை கையாளும் உள்நாட்டு நிறுவனங்களின் தலைவர்களும் கலந்துரையாடலில் கலந்து கொண்டதுடன், அவர்கள் தமது பணிகள் குறித்து இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவராக சந்திரசேகரம்!
நீதி அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பாக வேறு தரப்பினரினால் மேற்கொள்ளப்படுகின்ற அறிக்கைகள் அதிகார பூர்வம...
சீனாவிடம் இருந்தும் இலங்கைக்கு பிராணவாயு - வெளிவிவகார அமைச்சர் பீரிஷ் கோரிக்கை!
|
|
|


