நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது!
Tuesday, June 8th, 2021
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக ஆலய அறங்காவலர் சபையினர் அறிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று சூழ்நிலை காரணமாக இந்த தீர்மாணம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைமறுதினம் 10 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவிருந்த ஆலய வருடாந்த மகோற்சவத்தினை மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் நடாத்துவதற்கு முன்னர் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை அவசரமாக கூடிய ஆலய அறங்காவலர் சபையினர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதிக்கு திருவிழாவை பிற்போடப்பட்டுவதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
சானுக ரத்துவத்த உட்பட ஐவரின் விளக்கமறியல் நீடிப்பு!
தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி; அரபிக் கடலில் மேலடுக்கு சுழற்சி!
பொலிஸார் மீது வாள்வெட்டு - மாட்டினர் ரவுடிகள்!
|
|
|


