நம்பிக்கையை கட்டியெழுப்பும் மாநாட்டில் ஜனாதிபதி விசேட உரை!
Friday, June 14th, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆசிய கலந்துரையாடல்கள் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக, தஜிகிஸ்தானின் துசான் பே நகரை சென்றடைந்தார்.
இந்த மாநாட்டில் நாட்டின் பொதுவான விடயங்கள், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தப்படவுள்ளது. இன்று இந்த மாநாடு ஆரம்பமாகிறது.
நாளைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த மாநாட்டில் விசேட உரையை நிகழ்த்தவுள்ளார்.
அதேநேரம், ஜனாதிபதி தமது விஜயத்தின் போது பல்வேறு நாடுகளின் அரசத் தலைவர்களையும் சந்திப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
எரிபொருள் விலை திருத்தம் இன்று!
மரக்கன்று நடும் நிகழ்வு: பிரதமரினால் சுற்றாடல் அமைச்சருக்கு வெண்சந்தனக் கன்று வழங்கி வைப்பு!
பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தம் - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்ப...
|
|
|


