சீனாவின் எழுச்சியை அடிப்படையாகக் கொண்டே இந்த நூற்றாண்டில் ஆசியாவின் எழுச்சியும் தங்கியுள்ளது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டு!

Wednesday, June 16th, 2021

பல்வேறு நாடுகள் சீனா தேசத்தின் மீது படையெடுத்திருந்தபோதும் சீனா ஒருபோதும் பிற நாடுகள் மீது படையெடுக்கவில்லை என சுட்டிக்காட்டிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சீனாவின் எழுச்சியை அடிப்படையாகக் கொண்டே, இந்த நூற்றாண்டில் ஆசியாவின் எழுச்சி இடம்பெறும் என்பது எம் அனைவரதும் நம்பிக்கையாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு விழாவில், இணையவழி காணொளி ஊடாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி இயக்கத்தின் ஆதரவு காரணமாக, ஒரு அணிசேரா நாடாக சுதந்திர உலகில் சீனா முன்னேற முடிந்தது. அதேவேளை சீனாவிற்கும் இலங்கைக்கும், இடையே வரலாற்று ஒற்றுமைகள் பல உள்ளன.

அந்தவகையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமர்வில் இலங்கையின் சுதந்திரத்திற்காக சீனா ஆற்றிய சேவையை தாம் ஒருபோதும் மறக்க முடியாது எனவும் பிரதமர் நினைவுகூர்ந்திருந்தார்

மேலும் யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் இலங்கையின் சுதந்திரத்திற்காக சீன அரசாங்கம் செய்த தியாகங்களை தாங்கள் எப்போதும் பாராட்டுவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


தமிழ் தேசியத்தினையும் சமூக மாற்றத்தினையும் ஒருங்கே கொண்டுசெல்லும் மக்கள் சக்தியை உருவாக்குவோம் - பல்...
கிளிநொச்சி கண்டாவளை பகுதியில் வீடுகளைக் கையளித்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர் தவநாதன...
குடும்ப உறுப்பினர்களுடன் பண்டிகைகளை கொண்டாடுங்கள் – பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு வலியுறுத்து!