நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 பேர் ஒப்பம்!

Saturday, August 5th, 2017

வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை, ஒன்றிணைந்த எதிரணியினர், நாடாளுமன்ற அதிகாரிகளிடம், கையளித்துள்ளனர்.

32 உறுப்பினர்கள் கைச்சாத்திட்ட, நம்பிக்கையில்லாப் பிரேரணை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என, நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நெய்ல் இத்தவெல தெரிவித்தார்.

சபாநாயகர் தீர்மானித்ததன் பின்னர், ஒழுங்குப்பத்திரத்தில் அப்பிரேரணை சேர்த்துக்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சர் ஒருவருக்கு எதிராகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராகவோ நாடாளுமன்ற அமர்வு நாட்களிலேயே நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்படும் எனக் கூறிய அவர், இது அமர்வு நாட்களில் கையளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, அமைச்சர் ரவிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பாரதூரமானவை எனக் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றிபெற்று வெளியேறுவதை விட, அமைச்சர் ரவி, தனது பதவியை இராஜினாமாச் செய்யவேண்டும் என கூறியுள்ளார்.

Related posts: